Header Ads



சமையல் எரிவாயு விபத்துகளைத் தவிர்க்க, மின் கட்டமைப்பை பரிசோதியுங்கள் - முக்கிய ஆலோசனைகளை வெளியிட்டுள்ள அரச பகுப்பாய்வு திணைக்களம்


வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களைத் தவிர்க்க வீட்டிலுள்ள மின் கட்டமைப்பைப் பரிசோதிக் குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எரிவாயு விபத்துகள் இடம்பெற்ற எந்தவோர் இடத்திலும் சிலிண்டர்கள் வெடித்திருக்கவில்லை என்றும் மின்சாரக் கட்டமைப்புகளை பரிசோதனையிட்டு பாதுகாப்பாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளுமாறு அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த இடங்களில் உள்ள திரவ பெற்ரோலிய வாயு வெளியேறி காற்றில் கலந்துள்ளமையால், மின்சார சுவிட்ச் மூலம் ஏற்படும் தீப்பொறி பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டில் சமையல் எரிவாயுவின் மணம் வீசினால் மின்சார விளக்குகளை ஒளிரச் செய்யாமல், கதவு, ஜன்னல்களைத் திறக்காமல், மணம் குறையும் வரை சமையல் எரிவாயுவைப் பயன் படுத்த வேண்டாம் என அவர் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

1 comment:

  1. If you do not open the doors and windows the gas will still be inside the kitchen won't it be?it is mentioned without opening the doors and windows in the article.

    ReplyDelete

Powered by Blogger.