கொள்ளையிட வந்தவர் மடக்கிப்பிடித்து அடித்துக் கொலை - முல்லேரியாவில் சம்பவம்
முல்லேரியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாளிகாகொடெல்ல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்த மூவர், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி சொத்துக்களையும், பணத்தையும் கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.
அதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளதுடன், சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அயலவர்கள் கொள்ளையர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
மற்றைய இருவரும் உந்துருளியில் ஏறித் தப்பிச் சென்றுள்ளதுடன், பிடிபட்ட சந்தேக நபரை பிரதேச மக்கள் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தொியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த அந்நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், உயிரிழந்தவர் இனங் காணப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment