நாட்டுக்காக மிகத் தீவிரமான முடிவுகளை எடுத்து அவற்றை வெற்றியடையச் செய்ததில் நான் அளவற்ற மகிழ்ச்சியை அனுபவித்துள்ளேன்
அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபியை திறந்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் இன்று (18) பிற்பகல் கலந்து கொண்டிருந்த போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களின் பாதுகாப்பையும், உயிர் தியாகத்தின் மூலம் போர் வீரர்கள் எமக்கு உரிமையாக்கிய சுதந்திரத்தை பாதுகாப்பதனையும் எமது தலைவர்களும் எதிர்காலத்தில் உருவாகும் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என கௌரவ பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை,
போர் வீரர்களின் கரங்களினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மஹாசேயவினை இராணுவத்தினருக்காக உலகுக்கு அர்ப்பணிக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நாட்டுக்காக மிகத் தீவிரமான முடிவுகளை எடுத்து அவற்றை வெற்றியடையச் செய்ததில் நான் அளவற்ற மகிழ்ச்சியை அனுபவித்துள்ளேன். அந்த சமயங்களில் நான் பெற்ற மகிழ்ச்சியை விட, இந்த மாபெரும் செயலை முடித்த தருணத்தை நான் அதிகம் அனுபவிக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
மேயர் துரையப்பா கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரி பெஸ்தியன் பிள்ளேகே, 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கோப்ரல் ஹேவாவசம் முதல் நந்திக்கடலில் இறுதி யுத்தத்தில் வீரமரணம் அடைந்த சிப்பாய் வரை அனைத்து போர் வீரர்கள் மற்றும் எமது நாட்டிற்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பாடுபட்ட சகல போர் வீரர்களுக்கும், அதேபோன்று யுத்தத்தில் உயிர்நீத்த சகல தரப்பினருக்கும் இத்தூபியை வணங்கும் ஒவ்வொரு நொடியிலும் நன்றி கலந்த அஞ்சலி செலுத்தப்படும். உயிரிழந்த அனைவரும் எமது நாட்டின் எமது மக்கள்.
வரலாறு முழுவதும் நாம் போர்க்களத்தில் வென்றது திறமை மற்றும் துணிச்சலால் மட்டுமல்ல. இந்த நாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னர் வரலாற்று ரீதியாக எமக்கு அறிமுகப்படுத்திய உன்னதமான மனிதாபிமான மரபுகளை நாம் இன்றும் வரலாறு முழுவதிலும் பின்பற்றுவதே இதற்குக் காரணமாகும்.
போர் முடிந்ததும் கோட்டைகளை கட்டவில்லை. பாரிய குளங்களும், பாரிய தாதுகோபுரங்களுமே கட்டப்பட்டன. நாங்களும் அப்படியே செய்தோம்.
யுத்தம் நிறைவடைந்தவுடன் போர்வீரர்களுக்கான மஹாசேய தூபி ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினோம்.
இந்த தூபியினை திறந்து வைக்கும் இச்சந்தர்ப்பத்தில் அன்று காணப்பட்ட மரண அச்சம் குறித்து நினைவுபடுத்த வேண்டும். 1984 டொலர் ஃபாம், கென்ட் ஃபாம், கொக்கிலாய் மீது தாக்குதல் நடத்தி 91 பேரை கொன்று எமது வரலாற்று இராசதானிகளின் கிராமங்களுக்கு மரண அச்சத்தை ஏற்படுத்தினர். அதன் பிறகு இலங்கை வரைபடத்தில் 'எல்லை கிராமங்கள்' என்ற தேசம் சேர்க்கப்பட்டது. நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் ஜய ஸ்ரீ மஹா போதிக்கும் மரண பயம் ஏற்படுத்தப்பட்டது. . ஸ்ரீ மஹா போதிக்கு அருகில் சில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 81 பேரை பயங்கரவாதிகள் கொன்றதுடன் வில்பத்து கிராமங்களில் 81 பேரை கொன்றனர். அடுத்து திருகோணமலை, மொரவௌ, மஹதிவுல்வௌ, மெதிரிகிரிய, பள்ளிய கொடல்ல, ஹொரவ்பத்தானை, ஜனகபுர, ஜயந்திபுர, வெலிஓயா, அம்பாறை, உஹன, கல்முனை, சியம்பலாண்டுவ, மொரவௌ மற்றும் மொனராகலை எல்லையில் உள்ள அத்திமலே வரையில் கிராம மக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
கொழும்பு பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி மத்திய வங்கி, தெஹிவளை புகையிரத நிலையத்தில் குண்டுவெடிப்புடன் ஆரம்பமான பயணம் 2009 ஆம் ஆண்டு தெற்கில் மாத்தறை அக்குரஸ்ஸவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு குழுவினர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
நம் நாடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நமக்கு நம் நாட்டில் வாழ சுதந்திரம் இருக்க வேண்டும். நமது நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவ வீரர்களின் பாதுகாப்பையும், உயிர் தியாகத்தின் மூலம் இராணுவ வீரர்கள் எமக்கு உரிமையாக்கிய சுதந்திரத்தை பாதுகாப்பதனையும் எமது தலைவர்களும் எதிர்காலத்தில் உருவாகும் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பிரதமர் ஊடக பிரிவு
எல்லாம் பிரமாதம்.நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் மட்டத்திலும் அதள பாதாளத்துக்கு அடிபட்டுச் சென்று கொண்டிருக்கினறது. அத்தகைய ஆபத்தான நிலைமையில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் உங்களிடம் அல்லது அரசாங்கத்துக்கு இல்லை என்பதும், அத்தகைய ஆபத்துக்கு நாடு அடிபட்டுச் செல்வதற்கு உங்கள் பங்கு மிக முக்கியமாக அமைந்தது என்பதும் நாடறிந்த உண்மை. நீங்கள் பென்சன் செல்லும் போது உங்கள் சுயபுராணங்கள் எங்களுக்கு முக்கியமல்ல. நாட்டை அழிவுக்கு கொண்டு சென்று மக்களைப் பஞ்சத்தில் விட்டு விட்டு நீங்கள் ஓய்வாக இருப்பதற்குச் செல்கின்றீர்கள். சனாதிபதியாக இருந்து தோல்வியடைந்து மீண்டும் குருநாகலைக்கு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட போது சனாதிபதியின் சம்பளத்தையும் பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளத்தையும் இரண்டு சம்பளங்களை அரசாங்கத்தில் இருந்து பெறுவதன்மூலம் சட்டவிரோதமான செயல்பாட்டுக்கு முன்மாதிரியாகவும் இருந்தீர்கள். இனி உங்களுக்கு பேசுவதற்கு என்ன பெருமை இருக்கின்றது. அந்த வௌிநாடுகளில் பதுக்கிவைத்ததாகக் கூறப்படும் கோடான கோடி பொதுமக்களின் சொத்துக்களை திருப்பி நாட்டுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றால் நாட்டின் கடும் பஞ்சத்தையாவது கொஞ்சமாவது குறைக்கலாமே.
ReplyDeleteஎல்லாம் பிரமாதம்.நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் மட்டத்திலும் அதள பாதாளத்துக்கு அடிபட்டுச் சென்று கொண்டிருக்கினறது. அத்தகைய ஆபத்தான நிலைமையில் இருந்து நாட்டைக் காப்பாற்றும் உங்களிடம் அல்லது அரசாங்கத்துக்கு இல்லை என்பதும், அத்தகைய ஆபத்துக்கு நாடு அடிபட்டுச் செல்வதற்கு உங்கள் பங்கு மிக முக்கியமாக அமைந்தது என்பதும் நாடறிந்த உண்மை. நீங்கள் பென்சன் செல்லும் போது உங்கள் சுயபுராணங்கள் எங்களுக்கு முக்கியமல்ல. நாட்டை அழிவுக்கு கொண்டு சென்று மக்களைப் பஞ்சத்தில் விட்டு விட்டு நீங்கள் ஓய்வாக இருப்பதற்குச் செல்கின்றீர்கள். சனாதிபதியாக இருந்து தோல்வியடைந்து மீண்டும் குருநாகலைக்கு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட போது சனாதிபதியின் சம்பளத்தையும் பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளத்தையும் இரண்டு சம்பளங்களை அரசாங்கத்தில் இருந்து பெறுவதன்மூலம் சட்டவிரோதமான செயல்பாட்டுக்கு முன்மாதிரியாகவும் இருந்தீர்கள். இனி உங்களுக்கு பேசுவதற்கு என்ன பெருமை இருக்கின்றது. அந்த வௌிநாடுகளில் பதுக்கிவைத்ததாகக் கூறப்படும் கோடான கோடி பொதுமக்களின் சொத்துக்களை திருப்பி நாட்டுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றால் நாட்டின் கடும் பஞ்சத்தையாவது கொஞ்சமாவது குறைக்கலாமே.
ReplyDelete