Header Ads



ஜனாதிபதியின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற கருத்துக்கு மைத்திரிபால பதிலடி


அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீது, ஆளும் தரப்பின​ரே பொய்யான குற்றச்சாட்டுகளை  கடுமையான முறையில் முன்வைக்கின்றனர் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்.பி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்திருந்தால்தான் அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என ஞாபகமூட்டினார்.

சுதந்திரக் கட்சியின் மீது சேறுபூசும் செயற்பாடுகள் பாரதூரமானவை என்றும் நினைவூட்டிய அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 14 பேர், அரசாங்கத்துக்குள் இருப்பதையும் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டுமென அரசாங்கத்துக்கு நினைவூட்டினார்.

அத்துடன், தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் கடுந்தொனியில் பதிலளித்தார்.

No comments

Powered by Blogger.