Header Ads



மீள முடியாத சேதம் ஏற்படலாம் - வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்


மாகாண எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பில், மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்கும் பொருளாதார விவகாரங்களை எளிதாகப் பராமரிப்பதற்கும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன என்று குறிப்பிட்டார்.

உல்லாசப் பயணம், யாத்திரைகள் சென்று மகிழ்வதற்கான நேரம் இதுவல்ல என்றும் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியே செல்ல பரிந்துரைக்கப்படுகிறது என்றும் வலியுறுத்தினார்.

இருப்பினும், மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார்.

எனவே, சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை அவசியம் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர்,  பாதுகாப்பு நடவடிக்கைகளை நீக்கினால் ஏற்படும் சேதம் மீள முடியாததாக இருக்கலாம் என்றும் எச்சரித்தார்.

No comments

Powered by Blogger.