ஜனாதிபதி செயலகத்திற்கு முன், அசன் சலீம் தமது 9 பிள்ளைகளுடன் போராட்டம்
ஹம்பாந்தோட்டை நகர முதல்வர் எராஜ் பெர்னாண்டோ, கொள்ளுப்பிட்டியில் உள்ள காணிகளை பலவந்தமாக அபகரிப்பதற்கு குண்டர் கும்பலை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒன்பது பிள்ளைகளின் தந்தையான துவான் அசன் சலீம், குண்டர்களுக்கு காவல்துறை உதவுவதாக குற்றம் சாட்டுகிறார்.
தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி துவான் சலீம் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தவார ஆரம்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தினர்.
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோவின் குண்டர்கள் குழுவொன்று தன்னையும் அவரது பிள்ளைகளையும் தாக்கியதாகவும், கொள்ளுப்பிட்டியில் அவர் தங்கியிருந்த கொள்கலன் வீட்டையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். Tw
Post a Comment