6 மாதமாக புனரமைப்பு பணிகள், கொமிசன் என்ற பேரில் இழுத்தடிப்பு, தௌபீக் ஏன் என்னோடு தொங்கினார்? இதுவரை 7 அப்பாவிகளின் உயிர்களை குடித்த படகு விபத்துச் சம்பவம்
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உண்மையை மறைத்து அப்பாவிகளை கைது செய்வதாக இருக்கக்கூடாது அனுமதி கொடுத்ததற்காக நகர பிதா நளீமையையோ, படகு ஓட்டுனரையோ கைது செய்ய முடியாது எனவும் முன்னால் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவினால் அடிக்கல் நடும் போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அப்போது பாலத்துக்கான அடிக்கல் நடும் போது ஏன் என்னோடு தொங்கிக் கொண்டு வரவேண்டும் என முன்னால் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் அவரது இல்லத்தில் இன்று (28)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ன உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் முன்னால் பிரதமர் ரணில் உடன் குறிஞ்சாக்கேணி பாலத்துக்கு அடிக்கல் நடும் போது நிதி ஒதுக்கவில்லை என கூறியிருந்தார் இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது மக்கள் 100 வருடங்களுக்கு மேலாக அங்கீகரிக்கப்படாத பாதையில் பயணித்திருக்கிறார்கள் இதற்காக அனுமதியளித்தவர்களையும் படகு ஓட்டிகளையும் சிறையில் அடைக்க முடியாது இந்த பால புனரமைப்புக்கான கால தாமதம் ஏன் இதன் பிண்ணனி என்ன என்பதை நன்குணர்ந்து செயற்பட வேண்டும் இந்த புனரமைப்புக்கான கொந்தராத்து வேலைகள் இரு கம்பனிகளிடம் கைமாற்றப்பட்ட நிலையில் மூன்று கோடி ரூபா பணமும் கைமாற்றப்பட்டுள்ளது .
நீதி நியாயயம் உண்மை வெளிவரவேண்டும் இதில் அரசியல் குளிர் காய்வதற்கு எனக்கு விருப்பமில்லை. கடந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் மூலமாக 350 மில்லியனும் நெடுஞ்சாலை அமைச்சராக இருந்த ஹபீர் காசீம் அமைச்சின் மூலமாக 400 மில்லியனும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது இது வெறும் பொய் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கூறுகிறார். ஒரு நாட்டின் பிரதம மந்திரி ஊடான அபிவிருத்தி திட்டத்துக்கான அடிக்கல் நடும் போது அவர் என்னோடு ஏன் தொங்கி கொண்டு வந்தார் எனவும் கேள்வி எழுப்பிய முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், ஆறு மாத காலமாக புனரமைப்பு பணிகள் கொமிசன் என்ற பேரில் இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளது இதன் மூலமாக அப்பாவிகளை இதன் விவகாரத்தில் உள்ளுக்குள் தள்ளி தங்களை நியாயயப்படுத்துவதில் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்றார்.
ஹஸ்பர் ஏ ஹலீம்
Post a Comment