இந்த மாதத்தில் மாத்திரம் 4 வது கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் பதிவு
நவம்பர் மாதத்திற்குள் மாத்திரம் இடம்பெற்ற நான்காவது எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
கொட்டாவ – பன்னிப்பிட்டிய கல்லூரி சந்தி அருகிலுள்ள வீடோன்றில் இன்று அதிகாலை சிலிண்டர் வெடித்தது.
இந்த விபத்தால் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
முன்னதாக, 2021 மார்ச் 03 ஆம் திகதி மருதானை – சங்கராஜ மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றினுள் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவம் பதிவானது.
2021 நவம்பர் 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட சுற்றுலா விடுதியில் வெடிப்புச் சம்பவம் பதிவானது.
2021 நவம்பர் 16 ஆம் திகதி இரத்தினபுரி பஸ் தரிப்பிடத்திற்கு அருகே தனியார் உணவு விற்பனை நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் பதிவானது.
2021 நவம்பர் 20 ஆம் திகதி கொழும்பு ரீட் மாவத்தையிலுள்ள சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனமொன்றுக்கு சொந்தமான உணவக வளாகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.
கொழும்பு 7 மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகள் எரிவாயு கசிவு காரணமாக நிகழ்ந்த விபத்துகள் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்புகள் அனைத்துக்கும் எரிவாயு சிலிண்டர்கள் காரணமல்ல, அங்கிருந்த நிலைமைகள் தான் காரணம் என எரிவாயு நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்தால் அது தான் சரி என அரசாங்கம் அமைதியாக இருக்கும். எரிவாயு வெடித்து எத்தனை பேர் செத்துமடிந்தாலும் அரசாங்கத்துக்குப் பிரச்சினையில்லை. மேசையின் கீழ் செய்து கொண்ட உடன்படிக்கை படி கோடான கோடி பணம் அவர்களின் வங்கிக்கணக்குக்கு வந்துசேர்ந்தால் போதும். அவ்வளவுதான் பத்திரிகைளும் தொலைதொடர்பு சாதனங்களும் அறிக்ைக விடுத்தால் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் வந்து ஆராய்ந்துவிட்டு அந்த வெடித்தலுக்கும் வாயு சிலிண்டருக்கும் சம்பந்தமில்லை என அறிக்கை வௌியிடும். பொது மக்கள் செத்துமடி. பிரச்சினை முடிவடையும். உலகம் சத்தமிட்டால் அதுபற்றி விசாரிக்க சனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும்.
ReplyDelete