Header Ads



கிண்ணியா விபத்து, அரசாங்கத்தின் அசட்டையே காரணமென ஹக்கீம் பேச்சு -சஜித்தும், இம்ரானும் பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தனர்


கிண்ணியா , குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு பாதை விபத்து தொடர்பில், சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் இம்ரான் மஹ்ரூப் எம்.பியும், இந்த விபத்து குறித்து சபையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

 அரசாங்கத்தின் அசட்டை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளதாக ஹக்கீம் சுட்டிக்காட்டினார். முறையான வகையில் அந்த படகு பாதை சேவை நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 கிண்ணியா விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த படகு பாதை குறித்து பல தடவைகள் சுட்டிக்காட்டியபோதும் அது தொடர்பில் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என இம்ரான் மஹ்ரூப் எம்.பியும் தெரிவித்தார்.

இ​தேவேளை, இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சபையில் கேட்டுக்கொண்டார்.

1 comment:

  1. முஸ்லீம் காங்கிரஸ் எந்த அபிவிருத்தி பணியையும் அப்பகுதியில் செய்யவில்லை .எதிர்கட்சியிலேயே காலத்தை கடத்துகிறார்கள் .

    ReplyDelete

Powered by Blogger.