எந்த நாட்டுக்கும் பெருந்தொகை கடனை வழங்க இணங்கவில்லை : ஓமான் அறிவிப்பு
எந்த நட்பு நாட்டுக்கும் பெருந்தொகையான கடனை வழங்க ஓமான் உத்தியோகபூர்வமான அனுமதியையோ, இணக்கத்தையோ வழங்கவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஓமான் நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர், அந்நாட்டு வானொலி ஒன்றில் இதனை கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக ஓமான் அரசிடம் இருந்து 3 ஆயிரத்து 600 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள உள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Uthaya Gammanpila) கூறியிருந்தார்.
இதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதியையும் வழங்கியிருந்தது.
இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய அரசிடம் போதிய டொலர் கையிருப்பில் இல்லை என்பதால், அரசாங்கம் வெளிநாடுகளில் கடனுதவிகளை கோரி வருகிறது.
கம்மன்பிலவின் மாபெரும் பொய்யை ஓமான் அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கின்றது. ஒமான் ஒரு தன்ஸல அரசாங்கம் அல்ல. அந்த நாட்டின் வருமானத்துக்கு ஏற்ப அவர்களுடைய செலவுகளையும் சமநிலை செய்யும் அரசாங்கம் தான் ஓமானிய அரசு. அதுதவிர கண்மூடிக்ெகாண்டு இலங்கை போன்ற தோல்வி கண்ட குறிப்பாக முஸ்லிம்களை அவமானப்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை நசுக்கி அவர்களுக்கு தோல்வியையும் இழிவையும் ஏற்படுத்த முயற்சி செய்யும் ஒரு தோற்றுப் போன அரசாங்கத்துக்கு எந்த காரணம் கொண்டும் ஓமான அரசாங்கம் உதவியோ, பண உதவிகளோ வழங்கமாட்டாது என்பதுதான் உண்மை.
ReplyDelete