Header Ads



அலி சப்றியை நியமித்த போதும் எதிர்க்கபட்டது - சட்ட ஆலோசனை வழங்கவே ஞானசாரர் ஜனாதிபதி செயலணி தலைவராக்கப்பட்டார்


நாட்டுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர், ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya rajapaksa) தெரிவித்துள்ளார்.

அது சம்பந்தமாக தனக்கு ஆலோசனை வழங்கவே ஞானசார தேரர், அந்த செயலணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆளும் கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றில், இந்த செயலணிக்குழு தொடர்பான வினவப்பட்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு ஆலோசனை வழங்க நியமிக்கும் செயலணிக்குழுவிற்கான தலைவர் பதவியில் தான் விரும்பிய நபரை நியமிக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்தால், நண்பர் ஒருவருடன் பழகக்க கூட கட்சித் தலைவர்களிடம் அனுமதி பெற நேரிடும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நீதியமைச்சராக அலி சப்றியை நியமித்த போது இதேபோன்ற எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. எனினும் அலி சப்றி தற்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வயைில் சேவையை நிறைவேற்றி வருகிறார் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். Tamilw

4 comments:

  1. குற்றவாளி ஒருவரை பக்கத்தில் வைத்திருப்பதே தவறு என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆலோசனை வழங்க நியமனம் செய்திருக்கிறாராம்.

    ReplyDelete
  2. Unlike Gnanasara, Sabry is not a convicted criminal. Why Gota comparing Sabry with Gnanasara?

    ReplyDelete
  3. முஸ்லிம்களின் தனித்துவத்தை அல்லது கலாசார ரீதியாக அவர்களின் உரிமைகளைக்குழிதோண்டிப் புதைக்கும் ஒரு முயற்சியாகவே இந்நாட்டு முஸ்லிம்கள் சனாதிபதியின் இந்த நடவடிக்ைகயைப் பார்க்கின்றனர். இந்த நாட்டில் வாழும் பத்து இலட்சம் அல்லது அதைவிட அதிகமான அல்லது குறைவான அத்தனை முஸ்லிம்களும் சனாதிபதி ஞானசார தலைமையில் நியமித்த இந்த செயலணியை ஒட்டு மொத்தமாக எதிர்க்கின்றனர்.

    ReplyDelete
  4. சட்டம் இயற்றும் தலமைக்குத் தகுதி

    1. சட்டத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஜெயில் வாசம் அனுபவித்தது.
    2. ஜனாதிபதி ஆணைக் குளுவினால்- தடைசெய்யப்பட பரிந்துரைக்கப்பட்ட அமைப்பின் தலைமைப் பதவி.
    3. இனவாதத்தை தூன்டி கலவரங்களை
    உன்டுபண்ணி
    பழியை மற்றவர்கள்மீது போட்டுக் கொன்டிருக்கும் கூட்டத்தின் தலைமைப் பதவி.

    இப்படிப்பட்ட ஒரு மேதாவிதான் இந்த ஞானம்.

    ReplyDelete

Powered by Blogger.