பயங்ரவாத புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் அவல நிலையும், எதிர்காலமும்
இலங்கை 1980 கள் முதல் தமிழ் சிறுபாண்மை ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளால் 30 வருட கால சிவில் யுத்தத்தையும் அதனால் பல்வேறு இழப்புகளையும் உயிர் மற்றும் பொருளாதார இழப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. சிங்களப் பெரும்பாண்மை இனம் தங்களுக்கு உரிமைகளை வழங்க வில்லை என்ற கோசத்தின் கீழ் வடிவமைக்கப் பட்ட தமிழர்களின் ஆயுதம் ஏந்திய தாக்குதல்கள், தமது சிறுபாண்மையான முஸ்லிம்களை அடக்குமுறைக்குள்ளாக்கி தமது மேலாதிக்கத்தை வடக்கு கிழக்கில் நிலைனிறுத்த முயன்றது.
தமிழர்களின் இந்த ஆயுதக் கலாச்சாரம் வடக்கு கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் சிறுபாண்மையினரை அடக்கியொடுக்கும் விதமாக ஆரம்பத்தில் செயற்பட்டு பின்னர் பள்ளிவாசல் படுகொலைகள், முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல் என்று பரிணாமமடைந்து அதன் உச்சக் கட்டமாக வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களில் வாழ்ந்த 75,000 இக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பில் தமது தனி நாட்டுக் கோரிக்கையை நிலைனிறுத்த முயன்றதில் வந்து நின்றது.
https://www.facebook.com/218253051596818/posts/4564606020294811/
Post a Comment