தனது மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரும், பிரேமலாலின் சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்பு
தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்து, தங்களைக் குற்றமற்றவர்களாக்கி விடுவிக்குமாறுகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ரத்னப்ரிய குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று(04) ஆராயப்பட்டன.
இதன்போது அந்த மனுக்களை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி முதல் விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது இரத்தினபுரியில் தேர்தல் மேடைமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, நபர் ஒருவரைக் கொலை செய்தமை, மேலும் இருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு, இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
"ஜுன் மாதம் 31ஆம் திகதி" மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ReplyDelete????????????????????????