காட்டுத் தீ போல, வீட்டிற்குள் பரவிய கொரோனா - சுசந்திக்காவின் அனுபவம்
இலங்கைக்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக்கொண்டபோது அவருக்கு 25 வயது அவர் உறுதியான வலுவான மனோநிலையை கொண்டிருந்தார்.அது எந்த சூழ்நிலையையையும் எதிர்கொள்ளக்கூடியதாக காணப்பட்டது.
ஆனால் தற்போது இரண்டு பிள்ளைகளின் தாயான சுசந்திகஜெயசிங்க கவலைப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தன.
கொரோனா வைரஸ் எப்படி தொற்றியது என்பது என்பது எனக்கு தெரியாது நான் கவனமாகயிருந்தேன் எனது பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொண்டேன் என்னுடன் வாழ்ந்த எனது தந்தை உட்பட அனைவரையும் கவனமாக பார்த்துக்கொண்டேன் என அவர் தெரிவித்தார்.
எனது மகளிற்கு அறிகுறிகள் தெனபட்டவேளை எனது மகனும் பாதிக்கப்பட்டார் அது காட்டுதீ போல வீட்டிற்குள் பரவியது என அவர் 12ம் திகதி பரவ ஆரம்பித்த ஆரம்ப கட்ட பதற்றம் குறித்து தெரிவித்தார்.
வீட்டில் அனைவரும் ஒரேமாதிரியான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியவேளை நான் என்ன செய்வது எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தெரியாமல் திணறினேன் என அவர் குறிப்பிட்டார்.
நான் வழமையாக அச்சமற்றவள் சாதிக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவள் அந்த தருணத்தில் அவை அனைத்தும் பறந்துபோய்விட்டன பதட்டமே மேலோங்கியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் முதலில் நாடியது இலங்கை இராணுவத்தை – தனது பதின்ம வயதில் தனது விளையாட்டு வாழ்க்கையை வலுப்படுத்துவதற்காக இராணுவத்தையே அவர் நாடியிருந்தார்.
ஜெயசிங்க இலங்கை இராணுவத்தில் விளையாட்டிற்கு பொறுப்பாக உள்ள அதிகாரியை தொடர்புகொண்டுள்ளார் அவர் இராணுவதளபதிக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
அடுத்த நாள் காலை சுசந்திகாவிற்கும் பிள்ளைகளிற்கும் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன
இராணுவம் துரிதமாக செயற்பட்டு என்னையும் எனது குழந்தைகளையும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது, சோதனைகளின் முடிவுகள் நாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தன அதன் பின்னர் எனது வீட்டிலிருந்த ஏனையவர்களை சோதனைக்கு உட்படுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானதும் அவர்கள் அனைவரையும் இராணுவத்தினால் நடத்தப்படும் நிலையத்திற்கு அனுப்பினார்கள் என சுசந்திகா தெரிவித்தார்.
எனினும் நானும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பதற்கான அனுமதியை கோரினோம் என அவர் தெரிவித்தார்.
சண்டே டைம்ஸ் & TL
Post a Comment