ரிசாத்திற்கு எதிரான ஆதாரங்கள் இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்க - ரணில்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனிற்கு எதிரான ஆதாரங்களை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் அல்லது விடுதலை செய்யவேண்டும் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதுள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குதாக்கல் செய்ய முடியுமா என சபாநாயகர் சட்டமா அதிபரை கோரவேண்டும் என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அவர் குற்றவாளி என்றால், அவருக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வழக்கை முன்னெடுங்கள் அவருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லாவிட்டால் அவரை விடுதலை செய்யவேண்டும் என ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த கேள்வியில்லை இது அவை குறித்த கேள்வி என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் கைதுசெய்யப்பட்டால் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment