ஞானசாரர் தலைமையிலான செலயணியை மேலும் விஷ்த்தரித்து, தமிழ் பிரதிநிதிகளை உள்ளடக்க நடவடிக்கை - ஜனாதிபதி உறுதியளிப்பு
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைக்க ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலயாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் இந்தத் தகவலை Hiru செய்திச் சேவைக்கு வழங்கினார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான இந்த செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் யாரும் உள்ளடக்கப்படாமைக்குப் பெருமளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று -28- ஆளும் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளது தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் பிரஸ்தாபித்திருந்தனர்.
இதன்படி அந்த செலயணியை மேலும் விஷ்த்தரித்து, தமிழ் பிரதிநிதிகளை உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார் எனச் செந்தில் தொண்டமான் கூறினார்.
Post a Comment