பொலிஸ் அமைச்சர் என்பதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் சதிகாரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்கிறேன்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்குகு எதிராக அரசாங்கம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் அவ்வாறான நடவடிக்கையை எடுக்காவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையிலும் இதனை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ்பரவிக்கொண்டுள்ள தருணத்தில்சதிகாரர்கள் 100,000 பேரை ஆர்ப்பாட்டங்களிற்காக வீதிக்கு கொண்டுவந்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த சதிகாரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும்வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருந்த தருணத்தில் அப்பாவி ஆசிரியர்கள் அதிகளவு சம்பளத்தை கோருமாறு தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார். TL
Post a Comment