Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து வருத்தப்படுகிறேன், நான் தோல்வியடைந்தது பற்றி வருந்தவில்லை - ரணில்


கடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து மிகவும் வருத்தப்படவில்லை. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்டு வருத்தப்படுவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் இடைநிறுத்தப்படுவது,அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கருத்துக்கள் பரிமாறப்பட்டபோது ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவர் இன்று முன்வைத்த திட்டங்களை செயல்படுத்தியிருந்தால், அவர் வீட்டிற்கு செல்ல வேண்டியதில்லை. அவர் இன்று முன்மொழிந்ததைச் செய்யத் தவறியதால் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது, என்று, சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ரணில் விக்கிரமசிங்க, தாம் வீட்டுக்குச் செல்வதில் வருத்தப்படவில்லை, ஆனால், சபையில் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் கேள்வி அமர்வு ஏன் சபையில் நடத்தப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண (Buddhika Pathirana) கேட்டபோதே இந்த கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. 

No comments

Powered by Blogger.