கிராம சேவகர் வேனில் வந்தவர்களால் படுகொலை - அம்பன்பொலவில் சம்பவம்
அம்பன்பொல தெற்கு பிரிவின் கிராம உத்தியோத்தர், அடையாளம் தெரியாத குழுவினரால் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பன்பொல பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் எஸ்.எம். கபில பிரியந்த சபுகுமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
அம்பன்பொல பிரதேச செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த கிராம உத்தியோகத்தர், வேனில் வந்த இனந்தெரியாத குழுவால் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பழைய நெல் வகைகளை சேகரிப்பதன் மூலம் விளைச்சலை மேம்படுத்த அவர் கடுமையாக உழைத்தார் என்று குறிப்பிட்டுள்ள உள்ளூர்வாசிகள், சுற்றுச்சூழலில் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தனர்.
அவரது வீட்டில் ஏராளமான பழைய நெல் வகைகள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
Post a Comment