கொரோனா தடுப்பூசியை பெறாத பிச்சைக் காரர்களை தேடி வேட்டை
மேல் மாகாணத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத யாசகர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தினால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்றிரவு (30) 7 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொரோனா தடுப்பூசிகளைப் பெறாத 77 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் 22 பேருக்கு நேற்று (30) முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது மேல் மாகாணத்தில் வசிக்கும் 541 யாசகர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் 464 பேர் ஒரு தடுப்பூசியையேனும் பெற்றிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Post a Comment