உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில், நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியது
உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று (03) வெளியானது.
இதில் இலங்கையின் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஷர்களின் நெருங்கிய உறவினரும், நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில், நிரூபமா ராஜபக்ஷ, பிரதியமைச்சராக பதவி வகித்தார்.
2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நிரூபமா ராஜபக்ஷ பிரதி நீர்வளங்கள் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
குறிப்பாக இலங்கையில் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஷர்களின் நெருங்கிய உறவினருமான நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment