Header Ads



பிரதமர் மஹிந்தவுக்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்துக்கூறிய சீனா மேலும் உறவுகளை பலப்படுத்தவும் இணக்கம்


எமது நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொன்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அலரி மாளிகையில் சந்தித்தபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்தல் மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதல் என்பவற்றுக்கு இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு எமது பிரத்தியேக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு, இதன்போது வாழ்த்து தெரிவித்த சீன தூதுவர் சீ.ஷென்ஹொன்,அதற்கு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்படும் என்உறுதியும் நம்பிக்கையும் வெளியிட்டார்.

சீன மக்கள் வங்கி (PBOC) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) ஆகியவற்றுக்கு இடையிலான -10 பில்லியன் சீன யுவான் மதிப்பிலான இருதரப்பு நிதி பரிமாற்ற ஒப்பந்தமானது, உலகளாவிய முதலீட்டாளர்களின் உணர்வை வலுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை அவர்களிடத்தில் அதிகரிப்பதற்கும் உதவும் என்பதனை சீன தூதுவர் இதன்போது வலியுறுத்தினார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு நிறைவு, மற்றும் இறப்பர், அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை ஆகியவற்றை குறிக்கும் - 2022ஆம் ஆண்டானது, இலங்கை – சீன இருதரப்பு உறவின் மிக முக்கியமான ஆண்டாக விளங்கும் என்றும் சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த மாதம் வரவிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி மற்றும் சீன பிரதமர் ஆகியோர்களின் சார்பில் சீன தூதுவர் தனது முன்கூட்டிய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.