ஞானசாரரை பொலிஸ் நிலையம் அழைத்து, வாக்குமூலத்தை பதிவு செய்யப்போவதில்லை - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளமை குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறத்தேவையில்லை என பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து ஞானசார தேரருடன் புலனாய்வு பிரிவினர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் ஆனால் அவரை பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்யப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர்ஜெனரல் ஜகத் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
பௌத்தமதகுரு எவ்வேளையிலும் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய தனிநபர்கள் இருக்ககூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கைகளை வெளியிடும் அனைவரிடமிருந்தும் பொலிஸாரினால் வாக்குமூலங்கை பெறமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பாதுகாப்பின் அமைச்சின் எதிர்கால கூட்டங்களில் பௌத்தமதகுருவிடம் வாக்குமூலம் பெறுவது குறித்து ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார். TL
Ekama rata
ReplyDeleteEkama neethi
இந்த நாட்டில் எத்தனை வகைவகையான சட்டங்கள், பொதுமக்களுக்கான சட்டம். வியத்மகவுக்கு விசேட சட்டம், இனத்துவேசம் பேசும் மதகுருவுக்கு ஒரு சட்டம் என இதுவரை மூன்று வகையான சட்டங்கள் இந்த நாட்டில் செயல்படுகின்றன. ஒரே நாடு ஒரே சட்டம் என ஆட்சிக்கு வந்து முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை அழித்து ஒழிக்க ஒன்றுபட்ட பிரிவுகளுக்கிடையில் மூன்று சட்டங்கள்.
ReplyDeleteMr weerasekara ghanasara and you same policy.your the planner for digana attacked.
ReplyDelete