மொஹமட் அர்மாஷ் பெளத்தம், சிங்களம் உட்பட 9 பாடங்களிலும் ‘ A’ சித்தி
(ஏ.ஆர்.ஏ.பரீல், பி.எம்.முக்தார்)
அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப்பொதுத் தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளின்படி அளுத்கம, தர்காநகர், லோட்டஸ் வீதியில் வதியும் மொஹமட் ரிப்கான் மொஹமட் அர்மாஷ் பெளத்த தர்மம் மற்றும் சிங்களம் உட்பட 9 பாடங்களிலும் ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளார்.
தனது ஆரம்பக்கல்வியை அளுத்கம மகாவித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர், தற்போது கொழும்பு லும்பினி மகாவித்தியாலயத்தில் கல்வி பயல்கிறார். லும்பினி மகாவித்தியாலயத்திலிருந்தே இவர் பரீட்சை எழுதினார்.
இவர் தனது சிறந்த பெறுபேறு தொடர்பில் கருத்து வெளியிடுகையில் எனது வெற்றியில் என்னுடன் நிழலாக இருந்து உற்சாகம் தந்த எனது பெற்றோர், எனது வகுப்பாசிரியர் கெட்டமானே திஸ்ஸதேரர், அதிபர் பிரியந்த கருணாரத்ன உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி பாராட்டுகின்றேன். நினைவு கூறுகிறேன்.
எனது தந்தை தர்கா நகர் நாகந்தலகொட ஸ்ரீ ஞானிஸ்ஸர மகாவித்தியாலயத்தில் சிங்கள மொழியில் பயின்று உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தார். தனது படிப்பு பற்றி தந்தை அடிக்கடி நினைவுபடுத்துவார். அதை செவிமடுத்து அவரைப்போல் கல்விகற்க எனக்கு ஆசையேற்பட்டது. ‘முதலாம் தரம் முதல் 5 ஆம் தரம் வரை அளுத்கம மகாவித்தியாலயத்தில் கற்று 5 ஆம் தரபுலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியெய்தி லும்பினி மகாவித்தியாலயத்தில் இணைந்து கொண்டேன் என்றார்.- Vidivelli
Post a Comment