கடத்தல் கும்பலிடம் சிக்கி, பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 5 இந்தோனேசியப் பெண்கள் மீட்பு - கொழும்பில் சம்பவம்
கல்கிஸை பகுதியிலுள்ள விபச்சார விடுதியொன்று இன்றையதினம் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, சட்டவிரோத பாலியல் கடத்தல் கும்பலினால் பாதிக்கப்பட்ட ஐந்து இந்தோனேசியப் பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களும், சர்வதேச நட்சத்திர ஹோட்டல்களில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பெண்கள் நாட்டுக்கு வந்தவுடன், அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, தெஹிவளை மற்றும் கல்கிஸையில் அமைந்துள்ள விபச்சார விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
குறித்த பெண்கள் இன்று பிற்பகல் கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்போது, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பெண்கள், பாலியல் கடத்தலுக்கு ஆளானவர்கள் என்ற போதிலும், விபச்சார கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment