Header Ads



ஒரே நேரத்தில் 3 பெண் GIG க்கள் நியமனம் - இலங்கை வரலாற்றில் முதற் சம்பவம்


இலங்கை பொலிஸ் வரலாற்றில் 3 பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பெண் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக (WSSP) பணியாற்றிய, நிஷாந்தி செனவிரத்ன, ரேணுகா ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோரே இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

நிஷாந்தி செனவிரத்ன அரச புலாய்வுச் சேவை பிரிவிலிருந்து, ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு DIG ஆக இடமாற்றப்பட்டுள்ளார்.

ரேணுகா ஜயசுந்தர, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவிலிருந்து சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு DIG ஆக இடமாற்றப்பட்டுள்ளார். 

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையத்தின் இயக்குனராக பணியாற்றிய பத்மினி வீரசூரிய, காவல் நலப் பிரிவுக்குப் பொறுப்பான துணை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர், பிம்ஷானி ஜாசிங்காராச்சி இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதற்கமைய, இலங்கையில் தற்போது 4 பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் சேவையில் உள்ளனர். 


No comments

Powered by Blogger.