12 வயதிற்கு மேல் முழு தடுப்பூசி ஏற்றியவர்கள் 2 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின் நாட்டிற்குள் அனுமதி - கட்டார்
இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத் தடுப்பூசி ஏற்றியவர்கள் 2 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Post a Comment