முதலமைச்சர் வேட்பாளராக, களமிறங்கத் தயார் - தயாசிறி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனிவழியில் செல்லுமாயின் வடமேல் மாகாண சபைக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தான் தயார் என்று, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபைத்தொடர்பில் தனக்கு நிறையவே அனுபவம் இருக்கிறது. அதேபோல, முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குமாறு பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment