ஹரீனுக்கு 8 மணித்தியாலம் சத்திர சிகிச்சை
நாளை (வெள்ளிக்கிழமை) தனக்கு எட்டு மணி நேர சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இவ்விடயத்தைப் பதிவிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ, மே 1 ஆம் திகதி தனது வாழ்க்கையில் இதே போன்ற முக்கியமான சோதனையை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திரசிகிச்சை காரணமாக ஏற்பட்ட இருதய சிக்கல் தொடர்பாக ஹரின் எம்.பி, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நேற்றையதினம் செய்தி வெளியாகியிருந்தது.
Post a Comment