3 வருடத்தில் எமது நாட்டில் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்கலாம் - கம்மன்பில
தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையின் மின்உற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கையை , 2028ஆம் ஆண்டு வரை, அமெரிக்கா நிறுவனத்துக்கு வழங்கியமை இலங்கையின் எரிவாயு தொடர்பான ஆராய்ச்சிக்கு தடையாக இருக்கும் என்றார்.
நியு போட்ஸ் எனர்ஜி நிறுவனத்துக்கு எரிவாயு விநியோகத்துக்காக, 2023ஆம் ஆண்டிலிருந்து 5 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2028ஆம் ஆண்டு வரையே அவர்கள் எரிவாயுவை விநியாகிக்கவுள்ளனர்.
நாம் நினைக்கிறோம் இந்த வருடத்தின் இறுதியில் ஏலம்விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால், 3 வருடத்தில் எமது நாட்டில் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்கலாம்.
ஆனால் 2028ஆம் ஆண்டு வரை அமெரிக்க நிறுவனத்தக்கு எரிவாயு விநியோகத்தை வழங்குவதானது, இலங்கையின் எரிவாயு தொடர்பான அகழ்வாராச்சிகளுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என எரிசக்தி அமைச்சர் என்ற ரீதியில் தான் நினைப்பதாக குறிப்பிட்டார்.
அது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் இது குறித்து கடிதம் மூலம் அமைச்சரவை தெளிவுப்படுத்தியுள்ளோம். எனவே இலங்கையில் எரிவாயு விநியோகிக்கும் ஏகபோக உரிமையை 5 வருடத்துக்கு அமெரிக்காவுக்கு வழங்குவது, அதேப்போல் விலைமனுவை செயற்படுத்துவது என்பன முன்னெடுக்கப்பட்டாலும் எரிவாயு தொடர்பான விடயத்தை அறிந்தவர்கள் தமது அமைச்சிலேயே
உள்ளனர். ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு குழுவிலும் எமது அமைச்சின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கவில்லை என்றார்.
இந்த விடயங்கள் குறித்து அறிந்தவர்கள் என்ற ரீதியில் இது தொடர்பில் அமைச்சரவைக்கு இரண்டு கண்காணிப்பு அறிக்கைகைளை வழங்கியுள்ளோம் என்றார். இந்த அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எவ்வளவு நாள்கள் கலந்துரையாடினார்கள் என்பத குறித்து தனக்கு தெரியாது என தெரிவித்த அவர், ஒரே நாள், அல்லது இரண்டு நாள்களில் சர்வதேச ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன என்றும் கூறினார்.
அவர்கள் நிபந்தனைகளை முன்வைக்கின்றனர். நாம் இணங்குகின்றோம். ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர். எனவே எமது நாட்டுக்கு பாதகமாக அமையும் ஒப்பந்தத்தில் தான் கைச்சாத்திடவில்லை என்றார்.
Post a Comment