1 ஆம் திகதி முதல், இலங்கை வரவுள்ளவர்களின் கவனத்திற்கு..!
ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் நாட்டிற்கு வருகை தருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் எடுத்த பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின் இலங்கையில் வைத்து அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மத்தள மற்றும் கட்டுநாயக்க இரு விமான நிலையங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment