Header Ads



UAE செல்பவர்கள் விமான நிலையத்திற்கு 4 மணித்தியலங்களுக்கு முன் செல்லுங்கள்


ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பணியாளர்களுக்கு இன்று -14- முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் Rapid PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த பரிசோதனைகளுக்காக விமான பயணத்திற்கு 04 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு அமைய, அங்கு செல்லும் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பணியாளர்களுக்கு, கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை விமான நிலையத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.