அத்தியாவசிய பொருள்களை சேமித்து, வீடுகளுக்குள்ளே முடங்கி, உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் - PHI
கொரோனா தொற்றிலிருந்து உயிரை பாதுகாத்துக்கு கொள்வதற்காக, நாளை திங்கட்கிழமை முதல் சுய பயணக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மிக பொறுப்புடன் நடந்துகொள்ளவும். தேவையான அத்தியாவசிய பொருள்களை சேமித்துகொண்டு வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கவும்.
“கூடியவகையில் சுயக்கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும். வீடுகளைவிட்டு வெளியேறாமல் இருப்பது சகலரும் நல்லது” என்றார்.
அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் தீர்மானம் தொடர்பில் அதிருப்தி தெரிவித்த அவர், கேக் துண்டுகளை சாப்பிட்டுக்கொண்டு குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இது தீர்மானங்களை எடுக்காமல் மக்கள் படும் துன்பங்களை பார்த்து தீர்மானங்களை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளாந்தம் உண்ண வழியின்றி மக்கள் தவிக்கும் போது இவர் அத்தியாவசிய பொருட்களை சேமிக்க சொல்றாறே. இவர் எந்த நாடூ?
ReplyDeleteகுறிபிட்ட சிலரின் comment மட்டும் தான் போடுவீங்களோ.
ReplyDelete