பாராளுமன்றத்தில் பெண் Mp க்களுக்கு பாலியல் தொல்லை - வேடிக்கை பார்த்ததாக சபாநாயகர் மீது கண்டனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, இதுதொடர்பில் சபையில் இன்று (03) உரையாற்றினார்.
முன்னாதாக எழுந்த அவர், இந்த பாராளுமன்றத்தில் நான் உட்பட 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றோம். எனினும், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் போது, வாய்மொழிமூலமாக பெண் எம்.பிக்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பெண்கள், உறுப்பினர்களின் மனைவி மற்றும் முறையற்ற உறவுகள் தொடர்பில் இவ்விடத்தில் பேசவேண்டிய அவசியமில்லை. அது மக்களின் பிரச்சினையும் இல்லை, ஆனால், அவ்வாறு பேசப்பட்டபோது, அதனையெல்லாம் நீங்கள் கேட்டுக்கொண்டு சிரித்துகொண்டிருந்தீர்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைப் பார்த்து குற்றஞ்சாட்டினார். அதற்காக தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.
எமது அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவே இவ்வாறு வாய்மொழி மூலமான பாலியல் துன்புறுத்தலுக்கு அன்றையதினம் உட்படுத்தப்பட்டார் என்றும் ரோஹினி கவிரத்ன எம்.பி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், இதுதொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றேன் என்றார்.
Post a Comment