Header Ads



விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை, பிடித்து PCR பரிசோதனை


- வா.கிருஸ்ணா -

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிச் செயற்பட்ட 17 இளைஞர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் நேற்று (02) மாலை விளையாடிய இளைஞர்களே இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதிக்குச் சென்ற பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் க.ரமேஸ் தலைமையிலான சுகாதாரக் குழுவினரும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் விளையாட்டை தடுத்து நிறுத்தியதுடன், இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் முகக்கவசங்கள் அணியாத நிலையில் காணமுடிந்ததாக, பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தனர்.

இவ்வாறு பி.சி.ஆர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களில் யாராவது தொற்றாளர்களாக இனங்காணப்பட்டால், அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சிலர் மேற்கொள்ளும் செயற்பாடுகள் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டும் சுகாதாரப் பிரிவினர், அவ்வாறானவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.