ஆப்கானிஸ்தானின் தலைநகருக்குள் நுழைந்தார்கள் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றிய தாலிபன்கள், தலைநகர் கபூலில் அனைத்து பக்கங்களில் இருந்தும் நுழைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று தங்கள் போராளிகளுக்கு சொல்லப்பட்டிருப்பதாகவும், யார் யார் வெளியேற விரும்புகிறார்களோ அவர்களுக்கு பாதுகாப்பான வெளியேறும் வழியை ஏற்படுத்தித் தரும்படி கூறப்பட்டிருப்பதாகவும் தோஹாவில் உள்ள தாலிபன் தலைவர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது ராய்டர்ஸ் செய்தி முகமை.
Post a Comment