Header Ads



தலிபான்களின் ஆட்சியை இலங்கை அங்கீகரிக்கக் கூடாது, இங்கும் பயங்கரவாதம் தலைதூக்கும், காபூல் தூதரகத்தை மூடுங்கள் - ரணில்


இலங்கை அரசாங்கம் தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்க கூடாதென தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி, காபூலில் உள்ள இலங்கை தூதரகத்தை உடனடியாக மூட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஜிகாத், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் மய்யமாக ஆப்கானிஸ்தான் மாறும் என்பதால், இலங்கை அரசாங்கம் ஆப்கானிஸ்தான் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தலிபான்களின் கடந்தக் கால ஆட்சியின்போது ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளின் மய்யமாக மாறியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள ரணில், ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியுடன் இராஜதந்திர செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால், இலங்கையிலும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

4 comments:

  1. அமெரிக்கா தற்போது தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தீர்மானித்துள்ளது. நாங்கள் அல்காயிதாவைத்தான் பயங்கரவாத நிரலில் சேர்த்ததாகவும், ஆப்கானின் வாலிபர்களான தாலிபான்களையல்ல என அமெரிக்க சனாதிபதி பைடன் கூறும் போது ஐ.தே.கட்சியைப் பாழாக்கிய அதன் தலைவன் கூறும் செய்திகள் நகைப்புக்கும் கேலிக்கும் இடமளித்துள்ளது.

    ReplyDelete
  2. அமெரிக்கா தற்போது தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தீர்மானித்துள்ளது. நாங்கள் அல்காயிதாவைத்தான் பயங்கரவாத நிரலில் சேர்த்ததாகவும், ஆப்கானின் வாலிபர்களான தாலிபான்களையல்ல என அமெரிக்க சனாதிபதி பைடன் கூறும் போது ஐ.தே.கட்சியைப் பாழாக்கிய அதன் தலைவன் கூறும் செய்திகள் நகைப்புக்கும் கேலிக்கும் இடமளித்துள்ளது.

    ReplyDelete
  3. What a STUPID Statement. Thank God, this Born Loser is No More in Power and is Very, Very, UNLIKELY to be in Power Ever again.

    ReplyDelete

Powered by Blogger.