நாட்டை முழுமையாக முடக்கத் தயார், ஆனால் நிபுணர்கள் இதுவரை எந்த பரிந்துரைகளையும் முன்வைக்கவில்லை
நாட்டை முழுமையாக முடக்குவதற்கான வைத்திய பரிந்துரைகளை வழங்கினால். அதனடிப்படையில் செயற்படுவதற்கு அரசாங்கம் எந்நேரமும் தயாராகவே இருக்கிறது எனத் தெரிவித்த மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன, அதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கிறது என்றார்.
நாட்டை முழுமையாக முடக்குமாறு வைத்திய நிபுணர்கள் இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக எந்தவொரு பரிந்துரைகளையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரமே அரசாங்கம் சகல தீர்மானங்களையும் எடுக்கிறது. அதேபோல அந்த ஆலோசனைகளை செயற்படுத்துவதற்கும் அரசாங்கம் எந்நேரமும் தயாராகவே இருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக இராமன் -சீதைக்கதையைத் தொடர்ந்து கேட்டுவிட்டு தற்போது இராமனுக்கும் சீதைக்கும் உள்ள தொடர்பைக் கேட்கிறான் இந்ந வீணப்போன அரசியல் வாதி, இவர்களுடைய மூளை விரைவாக களிமண்ணாகிக் கொண்டிருக்கின்றது. அதன்விளைவுகளைத்தான் பார்த்தும் கேட்டுக் கொண்டும் இருக்கின்றோம். இதற்குச் சரியான பதிலை அந்த அறுபத்தி ஒன்பது இலட்சம் பேர்தான் பதில் கொடுக்க வேண்டும்.
ReplyDelete