அலரி மாளிகையில் ஆளும் கட்சியினருக்கு, இன்று விசேட பகல்போஷண விருந்துபசாரம்
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான முக்கியமான சந்திப்பொன்று இன்று (02) பகல் இடம்பெறவிருக்கின்றது.
அலரிமாளிகையில் இடம்பெறவிருக்கும் இந்த சந்திப்பில், விசேட பகல்போஷண விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையிலேயே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு ஆளும் தரப்பைச் சேர்ந்த பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையிலேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலம், பாராளுமன்றத்தில் எதிர்வரும் 6ஆம் திகதியன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் அபிலாஷைகளைக் கொள்ளையடித்து,அழித்து ஒழிக்கும் மங்கொள்ளைப் பகல்போசனம்.பொதுமக்களின் நம்பிக்கைகளைக் கொள்ளையடித்து அவர்களின் உணர்வுகளை அப்படியே மழுங்கச் செய்து அவர்களை முற்றாக ஏமாற்றும் பகல்போசனம்.இதில் கலந்து கொள்பவர்கள் பற்றி பொதுமக்களே தீர்மானிக்கட்டும்.
ReplyDelete