Header Ads



பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகள், இலங்கையில் செயற்படுகின்றன - டெய்லிமிரர் பத்திரிகை தகவல்


இலங்கையில் பல வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் செயற்படுவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல்களை பெறுவதற்காகவும், எதிர்பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காகவும் பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் இலங்கையில் செயற்படுவதாக தெரியவந்துள்ளது என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

சிலநாடுகளின் செயற்பாடுகள் குறித்து கண்காணிப்பதே, இந்த புலனாய்வு அமைப்புகளின் முக்கிய நோக்கமாக உள்ளது எனசில வட்டாரங்கள் தெரிவித்தன என டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.

சிலநாடுகள் உள்நாட்டில் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகளையும் இராணுவபிரசன்னங்களையும் கண்காணிப்பதே இந்த புலனாய்வு அமைப்புகளின் நோக்கம் என தெரிவித்துள்ள டெய்லிமிரர், இந்து சமுத்திரத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இலங்கை உள்ளதாக கருதப்படுகின்றது, பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில நாடுகள் இலங்கையை பயன்படுத்தலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

இராஜதந்திர கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளின் புலனாய்வு பிரிவுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் என தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன என டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.

யுத்தத்தின் போது உள்ளுர் அதிகாரிகளின் கூட்டங்களை இடைமறித்து தகவல்களை பெறலாம் என்ற அச்சம் காணப்பட்டது அவ்வேளை மூடிய கதவுகளிற்குள் இடம்பெற்ற சந்திப்புகளை இடைமறித்து தகவல்களை பெறுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் அவ்வேளை காணப்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன என தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கடவுச்சீட்டுடன்  செயற்படும்போது வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரை அடையாளம் காண்பது கடினம் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாத்திரம் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் செயற்படவில்லை ஏனைய நாடுகளிலும்  இது இடம்பெறுகின்றது வெளிநாட்டு தூதரகங்கள் புலனாய்வு தகவல்களை சேகரிப்பதற்கான மையங்களாக செயற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கையுடன் உள்ளன ,வெளிநாட்டவரின் பிரசன்னம் காரணமாக ஏதாவது ஆபத்து ஏற்படும்; என்றால் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் உடனடியாக செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Without muslim=against Muslims intelligence group.

    ReplyDelete

Powered by Blogger.