Header Ads



தனது தலைவன் நெருக்கடியில் இருக்க, உரத்துப் பேச வேண்டிய முஷாரப் அரசுக்கு சாமரம் வீசுவது விந்தையளிக்கிறது


பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுனபின் அரசைக் கவிழ்க்க முயலாமல் நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என்கிறார். அரசு மூண்றிலிரண்டு பெரும்பான்மையுடன் உள்ள போது அரசை கவிழ்க்க முடியாது என்பது இவருக்குத் தெரியாமலில்லை. அரசிடமிருந்து ஏதோ ஒன்றைப் பெற இவர் இந்தக் கருத்தை கூறுகிறார் என்பது மக்களுக்குத் தெரியாது என்று இவர் நினைக்கிறார் போலும் எழும் என தேசிய காங்கிரசின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான சட்டத்தரணி கே.எல்.சமீம் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுனபின் அண்மையில் விடுத்திருந்த "அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளை கைவிட்டு, நாட்டை கட்டி எழுப்ப கைகோருங்கள்" எனும் ஊடக அறிக்கைக்கு பதிலளிக்கும் நோக்கில் தேசிய காங்கிரசின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான சட்டத்தரணி கே.எல்.சமீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

தனது தலைவன் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் உரத்துப் பேச வேண்டிய பாரிய பொறுப்பை மறந்து அரசுக்கு சாமரம் வீசுவது விந்தையளிக்கிறது. சமூகத்தில் தனது தலைவனுக்கான இவரது குரல் போதாது என்ற கருத்தும் உண்டு. தேர்தலின் போது கசத்த மஹிந்த இப்போது வெல்லமானது எப்படியோ. பொத்துவில் மக்களை முஹுது விகாரையை வைத்து அரசியல் இலாபம் அடைந்ததைப்போல் இன்னும் என்ன அடையப் போகிறாரோ. அரசைக் கவிழாமல் பாதுகாக்க அரசின் பங்காளி கட்சியான தேசிய காங்கிரசும் உண்டு. உங்களை போன்ற யாருடைய பங்கும் அரசுக்குத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.