4 அமைச்சுக்களின் பதவிகளில் மாற்றம் - அரசாங்க வட்டாரங்கள் தெரிவிப்பு
நான்கு அமைச்சரவை அமைச்சர்களின் அமைச்சுக்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் அமைச்சுக்களே மாற்றப்படவுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டலஸ் அழகப்பெரும வெகுஜன ஊடக அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள் என்று அறிய முடிகிறது.
இந்த அமைச்சரவை மாற்றம் நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
225 are enjoying
ReplyDelete