சமூகத்தில் நாளாந்தம் சுமார் 30,000 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர் - Dr சந்திம ஜீவந்தர
பரிசோதனைகளில் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும் சமூகத்தில் நாளாந்தம் சுமார் 30,000 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர் என்று ஊகிக்கமுடியுமென வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் அதை ஊகிக்க முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இதேவேளை, சமூகத்தில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
தற்போது, நாளாந்தம் 2,000 முதல் 3,000 பேர் மட்டுமே தொற்றுக்குள்ளாவதாக சுகாதாரப் பிரிவினால் அறிக்கையிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment