Header Ads



வீட்டுக்கு தெரியாமல் குளிக்கப்போன 3, A/L மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்




புத்தல- கட்டுகஹல்ல குளத்துக்கு குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று (14) பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மூவரும் மொனராகலை- மஹாநாம தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும்  நண்பர் வீட்டுக்குச் செல்வதாகத் தெரிவித்து, 2 மோட்டார் சைக்கிள்களில் வீட்டிலிருந்து சென்றுள்ளதுடன், மாலையாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர்  புத்தல பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து.  கட்டுகஹல்ல குளத்துக்கருகில் மோட்டார் சைக்கில்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸார், குளத்தில் பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போதே, மூன்று இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டு  இன்று பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

சுமணசிறி குணதிலக, பாலித ஆரியவன்ஸ




No comments

Powered by Blogger.