17 ஆம் திகதிமுதல் திருமணங்கள் இரத்து - இன்றுமுதல் வீடு, ஹோட்டல்களில் எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முடியாது
இன்று -15- நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முடியாது என்றும் உணவகங்களில் 50 சதவீதமனோர் மட்டும் அமர்ந்து உணவுண்ண முடியும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அனைத்து திருமண நிகழ்வுகளும் இரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Post a Comment