Header Ads



இலவச 'Zoom' பெற்றுத் தருவதாக கூறி, மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் - பிரபல தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றுபவன் கைது


இணைய கல்வி நடவடிக்கைகளுக்கான இலவச 'ஸூம்' தொடர்புகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து பாலியல் வன்முறைகளில் ஈடுப்பட்ட நபர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவரென பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பிடபெத்த பகுதியில் பாடசாலை ஒன்றின் அதிபர் ஊடாக வேறு சில பாடசாலை மாணவிகள் இணையத்தளத்தை மையப்படுத்திய பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

இதற்கமைவாக மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இணைய கல்வி நடவடிக்கைகளுக்கான இலவச 'ஹும்' தொடர்புகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து சந்தேக நபர் குறித்த மாணவிகளின் தொலைப்பேசி இலக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் குறித்த இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு இணையம் ஊடாக துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியுள்ளார்.

சில மாணவிகளின் புகைப்படங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும் 28 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவர் இலங்கையின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் கடமையாற்றுவதுடன் தம்புத்தேகம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெமுத்து வருகின்றனர். இவ்வாறான நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிசார் கோரிக்கை விடுக்கின்றனர்.

தெரியாத நபர்களுக்கு தொலைப்பேசி இலக்கங்களையோ ஏனைய விபரங்களையோ வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.