Header Ads



இந்தியாவில் இஸ்லாமியர் வாழக்கூடாது என ஒரு இந்து கூறினால், அவர் ஒரு இந்துவே அல்ல - RSS தலைவர் தெரிவிப்பு


திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கும் ஆபத்து இல்லை. முஸ்லிம்கள், இந்துக்கள் என்ற இரு குழுக்கள் வேண்டாம். இணைந்து வாழ்வதே நாட்டின் வளர்ச்சிக்க உகந்தது என்று  உபியில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமியப் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டத்தில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது அவருக்கு ஆலோசகராக இருந்த முனைவர் க்வாஜா இஃப்திகார் அஹ்மத் என்பவர் எழுதிய 'தி மீட்டிங்ஸ் ஆஃப் மைண்ட்ஸ்: எ பிரிட்ஜிங் இனிசியேட்டிவ்' (The meeting's of mind's : A bridging initiative) என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் 

மோகன் பகவத் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்களே அல்ல . வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்த முடியாது. அனைத்து இந்தியர்களுக்கும் டிஎன்ஏ ஒன்றுதான் . இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தில், இந்துக்கள் அல்லது முஸ்லிம்களைக் காட்டிலும் இந்தியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் .முஸ்லிம்கள் இங்கு வாழக்கூடாது என்று கூறுபவர் ஒரு இந்து அல்ல. பசு புனிதமானது. இதனை கொல்வது தவறு, இதுபோல் ஒரு மனிதனை கொல்வதும் இந்து தர்மத்திற்கு எதிரானது. இவர்கள் மீது சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முஸ்லிம்களுக்கு எந்த விதமான ஆபத்திலும் இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லை என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் பேசுவது அவசியம்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்துவே அல்ல. பசு புனிதமான விலங்கு தான், ஆனால் மற்றவர்களைக் கொலை செய்பவர்கள் கூட இந்துத்துவா தத்துவத்துக்கு எதிரானவர்களே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகையவர்களைச் சட்டம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்க வேண்டும். மேலும், நாம் இந்தியாவில் வாழ்கிறோம், இங்கு இந்துவோ, இஸ்லாமியரோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது, இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

தற்போது இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் உள்ளது போன்ற மாய பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. ஆனால், நாம் அந்த சதி வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது. இங்கு இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். இந்தியாவில் ஒற்றுமை இல்லையென்றால் வளர்ச்சி என்பது துளியும் சாத்தியமில்லை. எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்கள் இயக்கத்துக்குக் கட்சி அரசியலில் விருப்பமில்லை. தேசத்தின் நலனே எங்களுக்கு முக்கியம்" இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்த பேச்சை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தை வலுப்படுத்த பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இந்த 'இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு' பேச்சு அம்மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


1 comment:

  1. உத்தரப்பிரதேசத்தில் மிக விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறதல்லவா அதர்ட்க்குத்தான் இந்த பேச்சு,BJPஎன்ற கட்சி வெல்வதர்ட்க்கு முஸ்லிம்களின் ஓட்டும் அவர்களுக்குத்தேவை அதனால்தான் இந்த பேச்சு !

    ReplyDelete

Powered by Blogger.