Header Ads



இங்கிலாந்து பயிற்சியாளரின் தன்னம்பிக்கை வார்த்தைகள் - தோல்விக்கு தானே பொறுப்பு என்கிறார்


இங்கிலாந்தின் இருதயம் நொறுங்கிய தோல்வி; பெனால்டி ஷூட் அவுட் ஸ்ட்ரைக்கர் தேர்வில் தவறு- கோச் ஒப்புதல்

யூரோ 2020 கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் இத்தாலியுடன் முழு நேர ஆட்டத்தில் 1-1 என்று சமன் செய்த இங்கிலாந்து பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. இத்தாலி சாம்பியனாக இங்கிலாந்தின் இருதயம் உடைந்தது.

பெனால்டி ஷூட் அவுட்டில் யார் யார் ஸ்ட்ரைக்கர்கள் என்பதை தான் தீர்மானித்ததாகவும் அதில் தான் தவறு நிகழ்ந்து விட்டது என்றும் தோல்விக்கு தானே பொறுப்பு என்றும் இங்கிலாந்தின் மேனேஜர் சவுத்கேட் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இங்கிலாந்து கப்டன் ஹாரி கேன், இந்தத் தோல்வியின் தழும்பு மறைய நீண்ட காலம் தேவைப்படும் என்றார். 

1966க்குப் பிறகு இங்கிலாந்து ஒரு பெரிய கோப்பையைக் கைப்பற்றும் கனவு தகர்ந்தது, 2வது நிமிடத்தில் லூக் ஷா மிக அருமையான கோலை அடித்தாலும் பெனால்டி ஷூட் அவுட்டில் ராஷ்போர்ட், சாங்கோ ஷூட்டை தவற விட சாக்காவின் ஸ்ட்ரைக்கை டோனரூமா தடுத்து விட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து கோச் காரெத் சவுத் கேட் கூறும்போது, “யார் பெனால்டி ஷூட் எடுக்க வேண்டும் என்பதை நான் தான் தீர்மானித்தேன். தோற்றாலும் ஜெயித்தாலும் ஒட்டுமொத்த அணிதான் காரணம் தனிப்பட்ட வீரர்களல்ல என்று நான் கூறினேன்.

அந்த பெனால்டியை நான் தான் சாக்காவை அடிக்கச் சொன்னேன். அது முழுக்க முழுக்க என் பொறுப்பு, ஜேடனோ, மார்கசோ பொறுப்பல்ல, முழுக்க என் பொறுப்பே. பயிற்சியில் இவர்களுடன் தான் பணியாற்றினோம். அதையடுத்துதான் இவர்கள் பெனால்டி கிக் அடிப்பார்கள் என்று தேர்வு செய்தோம்.

சாக்காவை இதை வைத்து முடிவெடுக்க முடியாது, 19 வயது ஸ்டார் அவர். தொடர்ந்து இங்கிலாந்தின் ஸ்டாராகவே இருப்பார். இந்தத் தொடரில் சாக்காவின் ஆட்டத்தை இந்த பெனால்டி தவறை வைத்து எடைபோடக் கூடாது.

இங்கிலாந்து அணி 100% தங்களை அர்ப்பணித்தார்கள், அதனால் துவண்டு போகக் கூடாது. தலையை நிமிர்த்தி நடக்க வேண்டும். இந்த வீரர்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன்” என்றார் சவுத் கேட்



No comments

Powered by Blogger.