சமாதான முயற்சிகளை ரணில், பலவீனப்படுத்துவாரென என சந்தரிக்கா அஞ்சினார் - எரிக்சொல்ஹெய்ம்
டுவிட்டர் கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கொழும்பின் இரு முக்கிய கட்சிகளும் அவ்வேளை சமாதான முயற்சிகள் விடயத்தில் ஒத்துழைத்து செயற்படவில்லை.
அவர்கள் நாடாளுமன்றத்தில்- அரசாங்கத்தில் ஒரே பதவிக்காக போட்டியிட்டுக்கொண்டிருந்தனர்.
பொதுவான நலனிற்காக இலங்கையின் முக்கிய இரு கட்சிகளும் இணைந்து செயற்பட தயாராக யில்லாதமையே சமாதான நடவடிக்கைகளை மிகவும் கடினமானதாக மாற்றியது.
விடுதலைப்புலிகளுடன் சமாதான உடன்படிக்கை யொன்றை எட்டுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி முயற்சிகளை மேற்கொண்டால் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை ஏற்றுக்கொள்ளாது அதனை பலவீனப்படுத்தும் என அச்சமடைந்தார்கள்.
அதேஅச்சம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியிலும் காணப்பட்டது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சமாதான முயற்சிகளை முன்னெடுக்க விரும்பியவேளை ரணில் அதனை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அஞ்சினார். இது சமாதான முயற்சிகளை மேலும் கடினமானதாக்கியது.
இரு கட்சிகளும் விடுதலைப்புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்காக தங்கள் சக்தியை செலவிடுவதை விட தங்களிற்கு எதிரான மோதலிற்கு அதிக சக்தியை செலவிடுகின்றனர் என நான் கருதினேன் .
Post a Comment