சாரா தப்பிச்செல்ல உதவி செய்தவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தேவகுமாரை விடுதலை செய்க - மனைவி வேண்டுகோள்
- கனகராசா சரவணன் -
உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் தொடர்புடைய சாரா தப்பிக்க உதவி செய்தவர் என சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள தேவகுமாரை விடுதலை வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்
உயிர்த்தஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்பவர் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே சாராவை இந்தியாவுக்கு தப்பி ஓட உதவி செய்த என்ற குற்றச்சாட்டில் சிஐடியினரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தேவகுமாரா விடுவிக்குமாறு அவரது மனைவியான டிலோஜினி கோரிக்கை விடுத்துள்ளார்.
எனது கணவரான தேவகுமார் என்பவரை சாரா என்ற புலத்தினி இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவினார்என்ற சந்தேகத்தில் சிஜடி யினரால் கடந்த வருடம் 7 மாதம் 11 ம் திகதி வீட்டில் வைத்து கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர்மீது சாட்டப்பட்ட குற்றம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை இந்த நிலையில் கொழும்பில் இருந்து கல்முனை நீதிமன்றத்திற்கு கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொண்டுவந்து மட்டக்களப்பு சிறையில் அடைத்துவைத்துள்ளதுடன் சட்டமா அதிபரிடம் இருந்து ஆவணம் வந்ததும் விடுவதாக தெரிவித்தனர். ஆனால் அது தொடர்பாக இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
எனக்கு 4 பிள்ளைகள் கல்வி கற்றுவருகின்றனர் நாங்கள் வாழ்வாதரம் எதுவும் இன்றி வறுமையில் இருக்கின்றோம் நான் மிளகாய் தோட்டத்தில் புல்லு பிடுங்க கூலி தொழிலுக்கு சென்று அதில் வரும் சம்பளத்தில் வருமானம் எதுவும் இன்றி வறுமையிலும் கஷ;டத்திலும் வாழ்ந்து வருகின்றோம்.
இந்த நிலையில் அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சாரா என்பவர் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார் அப்படி இருக்கும் போது எனது கணவர் செல்வராசா தேவகுமார் சாராவை இந்தியாவுக்கு தப்பி ஓட உதவி செய்தது என்பது எப்படி சாத்தியமாகும்.
சாரா உயிருடன் இல்லை என்றால், தப்பிக்க எப்படி உதவி செய்திருக்கமுடியும் எனவே எனது கணவர் நிரபராதி எனவே எனது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களது கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தி அவரை விடுவித்து தருமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment